Homeசெய்திகள்தமிழ்நாடு10 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி

10 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி

-

10 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Image

கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. சுருளி அருவியில் குளிப்பதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் பலவே பகுதிகளில் இருந்தும் அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுருளி அருவியில் கொட்டும் தண்ணீர் வனப்பகுதி வழியாக வந்து விழுவதால், இதில் குளித்தால் புத்துணர்வு கிடைப்பதாக சுற்றுலா பயணிகள் நம்புகின்றனர். கடந்த மே 28ஆம் தேதி சுருளி அருவி வனப்பகுதிக்குள் அரிசி கொம்பன் யானை உட்பகுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. சுருளி அருவியினை ஒட்டிய வனப்பகுதியான சண்முக நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்ததால் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டது.

Suruli Falls, Theni

இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதி அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் சுருளி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு சுருளி அருவியல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

MUST READ