Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயம்; சீர்குலையும் சட்டமன்ற விவாதங்கள்: இடதுசாரி தலைவர் கனகராஜ் சாடல்!

அரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயம்; சீர்குலையும் சட்டமன்ற விவாதங்கள்: இடதுசாரி தலைவர் கனகராஜ் சாடல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பொதுத்துறை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மிக வேகமாகத் தனியார்மயமாக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் சட்டமன்ற விவாதங்களின் தரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயம்; சீர்குலையும் சட்டமன்ற விவாதங்கள்: இடதுசாரி தலைவர் கனகராஜ் சாடல்!

மாணவர் போராட்டங்களை ஒடுக்கும் சர்க்குலர்: தலைமைச் செயலாளரை மாற்றக் கோரிக்கை
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் வாலிபர் அமைப்புகள் (SFI, DYFI போன்றவை) நடத்தும் ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் தலைமைச் செயலர் சுற்றறிக்கை (சர்க்குலர்) அனுப்பியுள்ளதாகக் கனகராஜ் குற்றம்சாட்டினார்.

we-r-hiring

“இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள போராட்ட சுதந்திர உரிமையைப் பறிக்க அரசு அதிகாரிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. கடந்த 50 ஆண்டு காலத் தமிழக வரலாற்றில், மாணவர் மற்றும் வாலிபர் அமைப்புகளை மட்டுமே குறிவைத்து இப்படி ஒரு சர்க்குலர் வெளிவந்ததில்லை” என்று சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்ட தலைமைச் செயலாளரை உடனடியாகப் பணிமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

“மக்களுக்காகப் போராடுவதே அரசியல் கட்சியின் முதன்மை வேலை!”
இடதுசாரி இயக்கங்கள் ஆட்சிக்கோ அல்லது அரசுக்கோ குடைச்சல் கொடுப்பதற்காகவே போராட்டங்களைத் தூண்டிவிடுகின்றன என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், “எங்கள் முதன்மை வேலையே மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்காக அவர்களைத் தூண்டிவிட்டு, உரிமைகளுக்காகப் போராட வைப்பதுதான். அதற்காகவே நாங்கள் கட்சிப் பூர்வமாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஒப்பந்தத் தொழிலாளர்களின் சுரண்டல், தூய்மைப் பணியாளர்களின் உரிமைகள் எனப் பாதிக்கப்படும் எளிய மக்கள் பக்கம் நின்று போராடுவதை கம்யூனிஸ்டுகள் எந்தச் சூழலிலும் கைவிட மாட்டார்கள்” என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.அரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயம்; சீர்குலையும் சட்டமன்ற விவாதங்கள்: இடதுசாரி தலைவர் கனகராஜ் சாடல்!

  • தமிழ்நாடு பட்ஜெட்டில் தீவிரமாகும் தனியார்மயம்: 4 முக்கியத் துறைகள் பாதிப்பு
    சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில், மக்கள் நலச் சார்ந்த அரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயமாக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட எச்சரிக்கை விவரங்கள்:
  • மாணவர் விடுதிகள்: மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தங்கும் விடுதிகளைக் கட்டும் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது.
  • சுற்றுலாத் துறை: சுற்றுலாத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ‘பி.பி.பி’ (PPP – Public-Private Partnership) எனப்படும் அரசு-தனியார் கூட்டு முறைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • போக்குவரத்துத் துறை: நட்டத்தைக் காரணம்காட்டிப் பேருந்துகளைத் தனியாரே இயக்கும் ‘ஜி.சி.சி’ (GCC – Gross Cost Contract) முறைக்கு மாற்றுவதும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதும் அரசுப் போக்குவரத்துத் துறையை முற்றிலும் தனியார்மயமாக்கும் செயலாகும்.
  • மின்சாரத் துறை: மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்தல் ஆகிய மூன்றிலும் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்படுகிறது. எண்ணூர் தெர்மல் பவர் ஸ்டேஷன் 8,000 கோடி ரூபாய் திட்டத்தில் தனியாருடன் கூட்டு, வெள்ளிமலையில் அதானி குழுமத்திற்கு திட்டங்கள் வழங்கப்படுவது மற்றும் சென்னை முழுவதும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ கொண்டுவருவது போன்றவை மின்சாரத் துறையைத் தனியாரிடம் தாரைவார்க்கும் வழிமுறைகளாகும்.

“அரசாங்கம் என்பது லாப-நட்டக் கணக்கு பார்க்கும் வியாபார நிறுவனம் அல்ல; அது கடைக்கோடி மக்களுக்குச் சேவை செய்யும் சமூகப் பொறுப்பில் இருக்கும் அமைப்பு” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயம்; சீர்குலையும் சட்டமன்ற விவாதங்கள்: இடதுசாரி தலைவர் கனகராஜ் சாடல்!

மேகமலை மற்றும் காணி பழங்குடியின மக்களின் நில உரிமை
மேகமலை மற்றும் வருசநாடு பகுதிகளிலும், கன்னியாகுமரி காணி செட்டில்மென்ட் பகுதியிலும் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பழங்குடியின மற்றும் ஏழை மக்களை அவர்களின் பூர்விக நிலங்களிலிருந்து வெளியேற்றும் போக்கு கண்டிக்கத்தக்கது. வன உரிமைச் சட்டத்தின்படி உடனடியாகச் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு உரிய நிலப் பட்டா மற்றும் வன உரிமைகளைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தெருச்சண்டையைப் போலச் சீரழிந்துவிட்ட சட்டமன்ற விவாதங்கள்
தற்போதைய அரசின் செயல்பாடுகளைக் கணிப்பதற்குப் போதிய கால அவகாசம் தேவையாக இருந்தாலும், சட்டமன்றத்தின் தற்போதைய போக்கைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருப்பதாகத் தெரிவித்த கனகராஜ், “சட்டமன்றத்தில் மக்களுக்கான ஆரோக்கியமான விவாதங்கள் நடப்பதில்லை. ‘அவரைக் காணோம், இவரைக் காணோம், அவருக்கு மருமகன், இவருக்கு மருமகன்’ எனத் தனிநபர் தாக்குதல்களிலும் கூச்சல்களிலுமே நேரங்கள் வீணடிக்கப்படுகின்றன. தெருச்சண்டையைப் போலச் சட்டமன்ற நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது மிகவும் அசிங்கமான அரசியல் பண்பாடு. இத்தகைய போக்கை மக்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறினார்.

“45 நாள் தண்ணீரை வச்சு என்ன செய்யுறது?”.. மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க சி.பி.எம் சண்முகம் வலியுறுத்தல்!

MUST READ