- Advertisement -
இன்றுடன் விடை பெற்றது ‘அக்னி நட்சத்திரம்’
மே 4 -ந் தேதி முதல் கடந்த 26 நாட்களாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்றுடன் விடைபெற்றது.

கத்திரி வெயிலின் கடைசி நாளான இன்றும் வேலூரில் இன்று அதிகபட்சமாக 105.3° டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. வேலூரில் நடப்பாண்டில் அதிகபட்சமாக கடந்த மே 15 ஆம் தேதி 108.1° பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கடந்த ஆண்டு மே 1-ம் தேதி உச்சபட்ச அளவாக இதே 108.1° பாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது குறிப்பிடத்தக்கது. வேலூரில் 2021-ம் ஆண்டு இதே மே 29-ம் தேதி அந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 106.5° பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.