
மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது, விமானத்தில் தவறவிட்ட பணப்பையை கண்டுபிடித்துக் கொடுத்த ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு திரைப்பட இயக்குநர் செல்வராகன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!
திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன், மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அவருடைய பணப்பைக் காணாமல் போனதை அறிந்து, அதனை தேடியுள்ளார்.
“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!
அப்போது ஏர் இந்தியா விமான நிறுவனம், இயக்குநர் செல்வராகவனைத் தொடர்புக் கொண்டு, பணப்பைத் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட அவர் காணாமல் போன பணப்பையை 15 நிமிடங்களில் கண்டுபிடித்துக் கொடுத்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வாயிலாக, நன்றி தெரிவித்துள்ளார்.