spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பத்தூரில் ஆன்லைன் செயலி மூலம் வாலிபரிடம் இருந்து பணம் பறித்த 4 பேர் கைது

அம்பத்தூரில் ஆன்லைன் செயலி மூலம் வாலிபரிடம் இருந்து பணம் பறித்த 4 பேர் கைது

-

- Advertisement -

அம்பத்தூரில் ஆன்லைன் செயலி மூலம் வாலிபரிடம் இருந்து பணம் பறித்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

we-r-hiring

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (34). இவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உடையவரான இவர் ஆன்லைன் செயலி மூலம் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த வினோத் (21) என்ற வாலிபரை தொடர்பு கொண்டு ஓரினச் சேர்க்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன்படி வினோத் அம்பத்தூர் மேனாம்பேடு சர்வீஸ் சாலை அருகே உள்ள காலி மைதானத்திற்கு வருமாறு வசந்தகுமாரை அழைத்துள்ளார். அங்கு வினோத் தனது நண்பர்களான பெரம்பூரை சேர்ந்த வசந்த் (22), மேனாம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா (21), கருக்கு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19) ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார். பின்னர் அங்கு வந்த வசந்தகுமாரை நால்வரும் சேர்ந்து அடித்து உதைத்து வசந்தகுமாரிடமிருந்த செல்போனை பிடுங்கி வங்கி கணக்கில் இருந்த 57 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு வினோத் மாற்றி உள்ளார்.

மேலும் வசந்தகுமாரின் செல்போனையும் பறித்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தகுமார் அருகே உள்ள அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வினோத், வசந்த், ராஜா, சந்தோஷ் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..

MUST READ