அன்னையர் தினத்தை முன்னிட்டு தன் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அன்பு முத்தங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அதை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது வைரலாகிவருகிறது.

மே 14 ஆம் தேதியான இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்களும் பொதுமக்களும் தங்களின் அன்னைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை அளித்து மகிழ்ந்து வருகின்றனர். தங்களின் தாயார் மறைந்து இருக்கும் பட்சத்தில் அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து தனது தாயாருடன் தன் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தாயார் அன்னை தயாளு அம்மாளிடம் சென்று அவரிடம் அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்பு முத்தங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார். இது குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர், ‘’உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! ’’என்று உருக்கமுடன் தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாகவே அன்னையர் தினத்தை முன்னிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். மேற்கத்திய கலாச்சாரத்தை பொறுத்தவரைக்கும் அங்கே குடும்ப உறவுகள் உடைந்த உறவுகளாகவே இருக்கின்றன. பெற்றோர் பிள்ளைகள் எல்லோரும் தனித்தனியாகவே வாழ்கின்றனர் . அதனால் பண்டிகை காலங்களில் எல்லோரும் ஒன்று கூடுவதைப் போலவே அன்னையர் தினத்தில் அன்னையை சந்தித்து அவர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்துக்கள் பெறுவது என்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறானது நமது கலாச்சாரம். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம் என்று இப்போது சொல்வதற்கில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தை போலவே இங்கேயும் உடைந்த குடும்பம் என்பது பெருகி வருகிறது. அதனால் அன்னையர் தினம் இங்கேயும் அவசியமாகிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.