கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தெளிவற்றது என தெரிவித்த இந்திய தொல்லியல் துறை தெரிவித்தற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய அரசு தாமதிப்பதாக நாடாளுமன்றத்தல் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்பியிருந்தனர். இந்நிலையில் கீழடி ஆய்வறிக்கை குறித்து தொல்லியல் துறை விளக்கமளித்துள்ளது. அதில், ராமகிருஷ்ணனின் ஆய்வரிக்கையை 5 பேர் கொண்ட இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். பின்னர், அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வறிக்கை தெளிவில்லாமலும் முழுமை பெறாமலும் உள்ளதாக தொல்லியல்துறை விமர்சித்துள்ளது.

இது குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கூறுகையில், 5 பேர் குழுவில் ஒரே ஒருவர் மட்டும் அகழாய்வு தறையில் சிறிதளவு அனுபவம் கொண்டவர். அகழாய்வு நடத்தி அறிக்கை சம்ர்பிக்காதவர்கள் மதிப்பாய்வு செய்தது எந்த வகையில் ஏற்புடையது என கேள்வி எழுப்பியுள்ளாா்.
மேலும், அகழாய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு, இந்திய தொல்லியல் துறை விளக்கம் கேட்டு 114 பக்க கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை எந்த வகையிலும் வெளியிட ஒன்றிய அரசுமறுக்கிறது என குற்றம் சாட்டிய சு.வெங்கடேசன், கீழடி வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என கூறியுள்ளாா்.
கீழடி நாகரிக காலத்தை மாற்றி அமைக்க ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த முயற்சிக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,
”கீழடி நாகரிகத்தின் உண்மை வரலாற்றை மாற்றவோ மறைக்கவோ முடியாது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.
இன்று என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் – கமல்ஹாசன் எம்.பி.


