spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பேருந்துகளின் பராமரிப்பு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் - செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் – செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

-

- Advertisement -

நெடுஞ்சாலையில் நடைபெற்ற அரசு பேருந்துடன் கார் மோதி ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியும் அடைந்தேன் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.அரசு பேருந்துகளின் பராமரிப்பு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் - செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்இதுகுறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஒரே நொடியில் தங்களின் அன்பு உறவுகளை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். இத்தகைய கொடூரமான விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில், அரசு பேருந்துகளின் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்“ என தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை  கூறியுள்ளாா்.

SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள்… தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…

we-r-hiring

 

MUST READ