ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா். குறிப்பாக இந்த அறிவுறுத்தலை தனியார் பள்ளிகள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ம் தேதி அதாவது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த விடுமுறை காலத்தில் எந்த வகையான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை முன்பே அறிவுறுத்தியிருந்த நிலையில், அந்த உத்தரவை மீறக்கூடாது என்று அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக வழங்கப்படுவது, அந்த நாட்களில் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது தவறு. இதனை தனியார் பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினாா்.
ஜாக்டோ -ஜியோ சார்பில் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம் நடத்துவதில் அரசு ஓழியல்கள் உறுதியாக உள்ளதாக அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். மதிதிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்ததாகவும், எனினும் ஜனவரி 6-ம் தேதிற்குள் அவர்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதுவரை 9,416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 7,898 வகுப்பறைகள் கட்டுமான பணியில் உள்ளன.
மேலும் பாழடைந்த பள்ளி கட்டடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், புதிய கட்டடங்கள் கட்டப்படும் வரை சில இடங்களில் சமுதாய கூடங்கள் அல்லது வாடகை கட்டடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் மூத்தவர்களின் ஆலோசனைகளும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பேசிய இளைஞரணி செயலாளரான அவருக்கு இந்த உரிமை உண்டு. பொங்கல் பரிசு தொகுப்பில் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ள நிலையில், இது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும், நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
பெங்களூரில் சேலத்தை சேர்ந்த பெண் சுட்டுக்கொலை… கணவர் போலீசில் சரண்!


