தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 15 துறைகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து 15 துறைகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை, வருமானவரித்துறை, வணிவரித்துறை, தபால் துறை, ரயில்வே, சிஆர்பிஎப், விமான நிலையங்கள் ஆணையரகம், போதைப் பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் ஒவ்வொரு துறை சார்பில் தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் – வானிலை மையம்


