சொத்து குவிப்பு வழக்கு- விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது இன்று லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக் கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வ்ழங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிக்கு சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் கடந்த செப்டம்பரில் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
இதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும் தருமபுரி நீதிமன்றத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்துள்ளது. கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன் சந்திர மோகன் மனைவி வைஷ்ணவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.