spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிளையாட்டில் தோற்றதால் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்... உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!

விளையாட்டில் தோற்றதால் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்… உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!

-

- Advertisement -

சேலம் அருகே விளையாட்டு போட்டியில் தோற்றதால் ஆத்திரத்தில் மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கொளத்தூரில் செயல்பட்டு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் அறைந்து உள்ளார்.

we-r-hiring

இது தொடர்பான விடியோ காட்சிகள சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், மாணவர்களை தாக்கிய கொளத்துர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

 

MUST READ