spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'பெங்களூரு குண்டுவெடிப்பு':சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை!

‘பெங்களூரு குண்டுவெடிப்பு’:சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை!

-

- Advertisement -

 

'பெங்களூரு குண்டுவெடிப்பு':சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை!

we-r-hiring

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை சென்னைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச் 01- ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்த விவகாரம்!

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஒரு நபரை சென்னை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

MUST READ