Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

-

 

பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!
Photo: Periyar University

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2024- 2025- ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“மே 01- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழக தருமபுரி பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் 2024- 2025- ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக, பெரியார் பல்கலைக்கழகம் இணையதளம் வழியாக இன்று (ஏப்ரல் 27) முதல் விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழகத்தில் உள்ள 27 துறைகளில் 43 படிப்புகளுக்கும், தருமபுரி பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான 8 துறைகளிலும் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் அறிவித்துள்ளார்.

“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்வதற்கு தேவையான முழு விவரங்களும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்கள் தெரிந்துக் கொள்வதற்கும் www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ