spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் நெருங்கும் சமயம் சீமான் அரசியல் ஆதாரம் தேடுகிறார்- எர்ணாவூர் நாராயணன் விமர்சனம்

தேர்தல் நெருங்கும் சமயம் சீமான் அரசியல் ஆதாரம் தேடுகிறார்- எர்ணாவூர் நாராயணன் விமர்சனம்

-

- Advertisement -

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பனைமர தொழிலாளர்கள் நலனுக்காக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் பனை நல வாரியம் அமைத்து பனைத் தொழிலாளர்கள் பாதுகாவலராக தமிழக அரசு இன்று திகழ்ந்து வருகிறது என்றும் தேர்தல் நெருங்கும் சமயம் சீமான் அரசியல் ஆதாரம் தேடுகிறார் என்றும் சமத்துவ மக்கள் கழக தலைவா் எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளாா்.தேர்தல் நெருங்கும் சமயம் சீமான் அரசியல் ஆதாரம் தேடுகிறார்- எர்ணாவூர் நாராயணன் விமர்சனம்மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரிய தாழையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் கள் தடையை நீக்க வலியுறுத்தி பனைமரத்திலிருந்து கள் இறக்கிய போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பனை மரத்தில் ஏறி கள் இறக்கி அதனை பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஊற்றி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு பனைமரத் தொழிலாளர்கள் வாரியம் சார்பாக ஒரு கோடி பனை விதைகள் விதைத்து உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளோம். அதன் பிறகு இன்று தமிழக அரசு பனைத் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவித்து அவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் சமயம் சீமான் அரசியல் ஆதாரம் தேடுகிறார்.

we-r-hiring

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பனைமர தொழிலாளர்கள் நலனுக்காக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் பனை நல வாரியம் அமைத்து பனைத் தொழிலாளர்கள் பாதுகாவலராக தமிழக அரசு இன்று திகழ்ந்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார்.

பயணியின் அலட்சியத்தால் இரயிலில் தீ விபத்து…

MUST READ