இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து (74) கேரளா திருவனந்நபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் இவரது உடல் தற்போது மதுரையில் வைக்கப்பட்டள்ளது. திருநெல்வேலியில் பிறந்தாா். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். ஸ்ரீ ஹரிகோட்டா சசிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளாா். மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினை பெற்றுள்ளாா்.
மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமுடன் பணியாற்றிய இவர் அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளாா்.
இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
2004-ஆம் ஆண்டில் ”செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்” என்ற தலைப்பில் செவ்வாய் கிரகத்தை மையமாக கொண்டு, கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞானம் பற்றியும் எழுதியுள்ளாா். இவரது 4 புத்தகங்களுக்காக தமிழக அரசு சிறந்த நூலாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

“விண்வெளி 2057″ எனும் நூல் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல், இயற்பியல்,வேதியல் பிரிவில் பரிசு பெற்றிருக்கிறது. அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு” எனும் நூல் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றுள்ளது. ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்” எனும் நூல் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றுள்ளது.
விஞ்ஞான அறிவை மக்களுக்கு எளிமையாகவும், பயனுள்ளதாகவும் கொண்டு சென்ற நெல்லை முத்து அவர்களின் பங்களிப்பு தமிழ் அறிவியல் இலக்கியத்துக்கே பெரும் இழப்பாகும்.