Homeசெய்திகள்தமிழ்நாடுபங்காரு அடிகளார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

-

- Advertisement -

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (வயது 82) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி சேவை ஆற்றியதோடு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சேவை ஆற்றியவர். மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்.

வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!

பக்தர்களால் அம்மா என வணங்கப்பட்ட பங்காரு அடிகளாரை இழந்து அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், லட்சக்கணக்கான வாடும் பக்தர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ