spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர் பூங்காவில் வங்கப்புலிக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றம்

வண்டலூர் பூங்காவில் வங்கப்புலிக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றம்

-

- Advertisement -

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிபட்ட வங்கப்புலிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கட்டியை அகற்றியுள்ளனர்.

we-r-hiring

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த 9 வயதான நகுலன் என்ற ஆண் வங்க புலிக்கு கழுத்தின் வலது புறத்தில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் கட்டி ஒன்று வளர்ந்து வந்தது. இதன் காரணமாக அந்த புலியின் உடல் நிலை மோசமடைய தொடங்கியது. இதனை அடுத்து வண்டலுர் பூங்கா மருத்துவர்கள் நகுலன் புலிக்கு சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நகுலன் புலிக்கு வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தபட்டு, 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் வெற்றிகரமாக கட்டியை நீக்கினர். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அதிக ரத்த போக்கு ஏற்படுவதை தடுக்க கட்டிக்கு செல்லும் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டன. நகுலன் புலியானது அறுவை சிக்கிச்சைக்கு பின்னர் கவனமாக மருத்துவர்களால் கண்காணிக்கபட்டது. இந்த நிலையில் நகுலன் புலி மறுநாளே வழக்கமான உணவுகளை உட்கொண்டு சுறுசுறுப்பாக காணப்பட்டதாகவும், தற்போது புலி நன்றாக இருப்பதாகவும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

MUST READ