Homeசெய்திகள்தமிழ்நாடு"பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!": சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி...

“பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!”: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி பேட்டி!

-

- Advertisement -

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ‘நியூஸ் போகஸ் தமிழ்’ யூடியூப் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தேசிய மற்றும் மாநில அரசியல் சூழல்கள், பாஜக அரசின் கொள்கைகள், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள சவால்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பங்களிப்புகள் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். "பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!": சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி பேட்டி!

மாநில முதல்வர்களின் செயல்பாடுகளும் இடதுசாரிகளின் வரலாற்றுப் பங்களிப்பும்

அண்மையில் நிதி ஆலோசகர் அபிஜித் துபே வெளியிட்ட மதிப்பீடு குறித்துப் பேசிய கனகராஜ், “பொருளாதார கட்டமைப்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பங்களிப்பும், சுகாதாரத் துறையில் கேரள முதல்வர் பிணறாயி விஜயனின் செயல்பாடும், கல்வித் துறையில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவி அரவிந்த் கெஜரிவாலின் பணிகளும் குறிப்பிடத்தக்கவை” என்று சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

கேரள மாநிலத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், அது வெறும் தனிநபரால் சாத்தியமானது அல்ல என்றும், பல தலைமுறைகளாக இடதுசாரி முன்னணி (LDF) ஆட்சிகள் உருவாக்கிய வலுவான உள்கட்டமைப்பின் விளைவு என்றும் குறிப்பிட்டார். “இந்தியாவில் மனிதவளக் குறியீட்டில் கேரளா முதலிடத்தில் இருப்பதற்கு இடதுசாரி ஆட்சிகளின் அடித்தளமே காரணம். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பல முற்போக்கான சட்டங்களுக்குத் தாய் சட்டமாக விளங்கியது இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசுதான்” என்றார். மேலும், திரிபுராவில் பழங்குடியின மக்களின் மொழிக்கு வரிவடிவம் அமைத்துக் கொடுத்த சிபிஎம் முதல்வர் தசரத் தேவ் அவர்களுக்கு மக்கள் கோயில் கட்டியிருந்த வரலாற்று நிகழ்வையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தமிழகத்தின் அரசியல் வரலாற்றைக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதாவின் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு நடவடிக்கை, மு.கருணாநிதியின் குடிசை மாற்று வாரியம் மற்றும் கண்ணொளி வழங்கும் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசியலும் ‘இந்தியா’ கூட்டணியின் சவால்களும்

பாஜகவை வீழ்த்துவதே முதன்மை இலக்கு என்று சுட்டிக்காட்டிய கனகராஜ், கூட்டணியில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பட்டியலிட்டார்:

  • காங்கிரஸின் அணுகுமுறை: பாஜகவை வீழ்த்த காங்கிரஸுடன் சிபிஎம் கரம்கோர்த்தாலும், சில மாநிலங்களில் காங்கிரஸின் அணுகுமுறை கூட்டணிக்கு உதவிகரமாக இல்லை. புதுச்சேரியில் பாஜக அரசை வீழ்த்தும் வாய்ப்பு இருந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை; பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் காங்கிரஸின் அளவுக்கு அதிகமான தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கைகள் கூட்டணியின் வெற்றியைப் பாதிப்பதாக விமர்சித்தார்.

  • கேரள அரசியல் சூழல்: கேரளாவில் காங்கிரஸும் பாஜகவும் ஒரே நேர்கோட்டில் பயணித்து சிபிஎம்-ஐ எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், “கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் காலத்திலும் மதவாத சக்திகளோடு சமரசம் செய்து கொண்டது இல்லை” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

  • கூட்டணி ஒருமைப்பாடு: “வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் சேரும்போது, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் உறுதியில் காங்கிரஸ் தெளிவுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

மத்திய பாஜக அரசு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கடுமை விமர்சனம்

மத்திய அரசு மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் கொள்கைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர்:

  • வேலைவாய்ப்பு வாக்குறுதி பொய்: பாஜக அரசு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறியது ஏமாற்று வேலை. 2014-ல் 47 லட்சமாக இருந்த மத்திய அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 45.45 லட்சமாகக் குறைந்துள்ளது. ரயில்வே துறையில் 70,000 ஊழியர்களின் இடங்களும், பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன.

  • இளைஞர்களைக் கவரும் உத்திகள்: “சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் போடுவதால் மட்டுமே இளைஞர்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது. காகிதத்தில் ‘சர்க்கரை’ என எழுதினால் அது இனிக்காது, சர்க்கரையைத் தின்றால் மட்டுமே இனிக்கும். அதுபோல இளைஞர்களுக்கு உண்மையான வேலைவாய்ப்பையும், அமைதியான சூழலில் தரமான கல்வியையும் உறுதி செய்ய வேண்டும்” என்று சாடினார்.

நேர்காணலின் நிறைவாக, “பாஜக மற்றும் சங் பரிவாரின் வெறுப்பு சித்தாந்தம் இந்திய மண்ணில் இருந்தே முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட வேண்டும்” என்று கனகராஜ் வலியுறுத்தினார்.

“தவெகவை நம்பினா நடுத்தெருவுதான்!”: காங்கிரஸுக்கு ஆப்பு வைக்கும் விஜய் தொண்டர்கள்! பொங்கி எழுந்த அலிம் அல் புகாரி!

MUST READ