தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னையைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, தலைமை செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், சென்னை மாவட்டச் செயலாளர்களான மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நே.சிற்றரசு, மயிலை த.வேலு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மழைக்காலத்தில் மக்களுக்கு உதவ அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மழைக்காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதுடன், தேவையான நிவாரணப் பணிகளில் கட்சியினர் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடையக்கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மழைக்கால உதவிப் பணிகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
