மாற்றுத்திறனாளியை அவமதித்த பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட்
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவாவை பேருந்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சென்னையில் இருந்து மதுரை செல்ல கழிவறை வசதியுடன் உள்ள அரசு விரைவு பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் கோட்டாவில் பயணம் செய்ய இந்திய கிரிக்கெட் மாற்றுதிறனாளிகள் அணியின் கேப்டன் சச்சின் சிவா சென்றுள்ளார் அப்பொழுது அந்த பேருந்தின் டிரைவர் ராஜா மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை பேருந்தில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளார். மேலும் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
பின்னர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா வேறொரு பேருந்து மூலமாக மதுரை சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சம்பந்தப்பட்ட ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு உடனடியாக பேருந்து ஓட்டுனர் ராஜாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் பணியில் இருந்த நடத்துனரிடம் நாளை நேரடியாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.