Homeசெய்திகள்தமிழ்நாடுஇடைத்தேர்தல் அறிவிப்பு: மதுராந்தகத்தில் போஸ்டர்கள், பேனர்களை அதிரடியாக அகற்றும் நகராட்சி நிர்வாகம்!

இடைத்தேர்தல் அறிவிப்பு: மதுராந்தகத்தில் போஸ்டர்கள், பேனர்களை அதிரடியாக அகற்றும் நகராட்சி நிர்வாகம்!

-

- Advertisement -

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, நகராட்சிப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள், சுவரொட்டிகள் மற்றும் கொடிகளை நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக அகற்றி வருகின்றனர்.இடைத்தேர்தல் அறிவிப்பு: மதுராந்தகத்தில் போஸ்டர்கள், பேனர்களை அதிரடியாக அகற்றும் நகராட்சி நிர்வாகம்!

இடைத்தேர்தல் பின்னணி மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

இதற்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இதன் தொடர்ச்சியாக, மதுராந்தகம் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுராந்தகம் பேருந்து நிலையம், அரசு அலுவலக வளாகங்கள், முக்கியச் சாலை சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் விளம்பரப் பலகைகள், பேனர்கள், கொடிக்கம்பங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை கிரேன் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் உதவியோடு அகற்றப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை பொது இடங்கள் மற்றும் அரசுச் சொத்துக்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதோ அல்லது பேனர்கள் வைப்பதோ முற்றிலுமாகக் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் மற்றும் நபர்கள் மீது தேர்தல் விதிகளின்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து கைதான இலங்கை நபர்: தாய்நாடு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

MUST READ