spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம்

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

M.K.Stalin

சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த மாதம் மார்ச் 20ம் தேதி தமிழக சட்டப்பேரவைகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் அதன் தொடர்ந்து  மானிய கோரிக்கைகள் மீதான கூட்டம் முடிவடைந்த நிலையில் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, இத்திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
அதேபோல், ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும், அடுத்த மாதம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்களுடன் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ