Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

-

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,
குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம்  குறிப்பிட்டுள்ளது.

நாளை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள்  இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

இதேபோல், வரும் 4ஆம் தேதி  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களிலும், அக்டோபர் 5ஆம் தேதி அன்று  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்...கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

MUST READ