Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கோவை திருப்பூ, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ