Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்... சென்னை காவல் ஆணையர் அருண் தகவல்

ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்… சென்னை காவல் ஆணையர் அருண் தகவல்

-

- Advertisement -

ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை தேடி வருகின்றனர்.

we-r-hiring

போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.

இந்த நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், கொலை வழக்கில் இன்னும் 3 முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளின் சொத்துக்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்ய உதவி ஆணையர் அகஸ்டின் பால் சுதாகர் தலைமையில் பொருளாதார விசாரணைக்கு குழு அமைத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

MUST READ