Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!

சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!

-

- Advertisement -

 

train

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் இன்று (அக்.02) 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வரையிலான வழித்தடத்தில் இருந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.15 மணி வரை காஞ்சிபுரம்- கடற்கரை மற்றும் கடற்கரை- தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்துச் செய்யப்படுகின்றன.

கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம்

செங்கல்பட்டு- சென்னை கடற்கரை வழித்தடத்தில் காலை 10.55 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி, இன்று (அக்.02) விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப் படி, கடற்கரை- செங்கல்பட்டு- அரக்கோணம்- சூலூர் பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

MUST READ