Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை: அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை: அமைச்சர் ராஜ்மோகன்

-

- Advertisement -

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் ‘சிக்கன் பிரியாணி’ வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:

அமைச்சர் ராஜ்மோகன்

we-r-hiring

தமிழ்த்தாய் வாழ்த்தும் ஆளுநர் மாளிகை சர்ச்சையும்

“அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழாவின்போது அப்போதைய அமைச்சர் பொன்முடி பங்கேற்றிருந்தார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்வின் இறுதியில்தான் பாடப்பட்டது. எனவே, இது வரலாற்றிலேயே முதல்முறையாக நடந்ததாகக் கூறுவது தவறானது.

எங்களைப் பொறுத்தவரைத் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் எப்போதுமே முதல் முன்னுரிமை கொடுப்போம்; இதுதான் எங்கள் தெளிவான நிலைப்பாடு. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவர்கள் சில நடைமுறைகளைப் பின்பற்றலாம். ஆனால், தவெக அன்றும், இன்றும், என்றும் தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் தனது நிகழ்ச்சிகளைத் தொடங்கும். தேர்தலுக்கு முன்பு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகை விழாவில் பங்கேற்றபோதும், அவர் முன்னிலையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பிற்பாதியில் பாடப்பட்டது” எனக் சுட்டிக்காட்டினார்.

சத்துணவில் சிக்கன் பிரியாணி

“அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ‘சிக்கன் பிரியாணி’ வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் பரிந்துரை செய்துள்ளேன். இது பல்வேறு துறைகள் சார்ந்த விஷயம் என்பதால், முதலமைச்சர் இதனைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்” என்றார்.

முந்தைய ஆட்சிகளின் நல்ல திட்டங்கள் தொடரும்

“திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களாக இருந்தாலும், அவை மக்களுக்குப் பயனளிக்கும் நல்ல திட்டங்களாக இருந்தால் அரசியல் பகைமையோடு எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாது. உதாரணமாக, அம்மா உணவகங்களின் தரம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதில்தான் நாங்கள் போட்டி போடுவோம்” என்று குறிப்பிட்டார்.

திமுகவின் தோல்வி குறித்த விமர்சனம்

“கொளத்தூரில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு தொடர்பாக திமுகவினர் பேசுவது ‘ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்’ என்பது போன்றது. ஆராய்ச்சி செய்வது அவர்களின் உரிமை, செய்து கொள்ளட்டும். சட்ட ரீதியாக எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருந்தோம். அவர்கள் முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தேர்தல் தோல்விக்கான காரணத்தை வெளியில் தேடிக் கொண்டிருக்கும் அவர்கள், இன்ஸ்டாகிராம் என்றும் ஈ.வி.எம் (EVM) என்றும் சாக்குப்போக்குகளைச் சொல்கிறார்கள். உண்மையிலேயே மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் நல்லது” என்றார்.

தனியார் பள்ளிக் கட்டணக் கட்டுப்பாடு

“தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்தாமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கட்டணங்களைக் குறைக்கத் தவறினால், ஏற்கனவே நடைமுறையிலுள்ள ‘கட்டண நிர்ணயக் குழு’ உடனடியாக மறுசீரமைப்பு செய்யப்படும். அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் உறுதியளித்தார்.

தவெக அரசை வீழ்த்த வியூகம்: ஆளுநர் சந்திப்பும், தேசிய அரசியலில் புதிய கூட்டணி கணக்குகளும் – மூத்த பத்திரிகையாளர் அயநாதன் பிரத்யேகப் பேட்டி!

MUST READ