Homeசெய்திகள்தமிழ்நாடுசிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

திருப்பெரும்புதூர் சிப்காட்டில் தொழிற்சாலை பெண் பணியாளர்களுக்கான ரூ.706.50 கோடி மதிப்பிலான மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் நாட்டிலேயே முதன்முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் திருப்பெரும்புதூர், வல்லம் – வடகால் சிப்காட்டில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மெகா குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மெகா குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 10 மாடிகள் கொண்ட 13 பிளாக்குகளில் மொத்தம் 240 அறைகள் உள்ளன. மேலும், சிப்காட் குடியிருப்பு வளாகத்தில் விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமரக்கூடிய உணவகம், குடிநீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவையும் இக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

சிப்காட்

இந்நிலையில், இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களில் 42% பேர், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரிவதாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் மட்டுமின்றி தெற்காசியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொழிற் துறைக்கு சாதகமான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொழில் பூங்காக்கள் இல்லாத மாவட்டங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் முதலமைச்சர் கூறினார்

இநத நிகழ்ச்சியில் அமை ச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா .மோ .அன்பரசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ