spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவீதி வீதியாக வீடு வீடாக சென்று ஆதரவுத் திரட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வீதி வீதியாக வீடு வீடாக சென்று ஆதரவுத் திரட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

வீதி வீதியாக வீடு வீடாக சென்று ஆதரவுத் திரட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

we-r-hiring

வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தமது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) காலை 08.00 மணிக்கு வாக்குச்சேகரித்தார்.

“வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்”- வேட்பாளர் ராயபுரம் மனோ குற்றச்சாட்டு!

வடசென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் திறந்தவெளி ஜீப்பில் சென்றும், நடைபயணமாக சென்றும் பொதுமக்களை நேரில் சந்தித்த தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வழிநெடுகளிலும், இருபுறங்களிலும் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறங்களிலும் பறை இசை, பரதநாட்டியம் என அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமரிசையாக நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

கொளத்தூரில் வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்து அவர்களுடன் கால்பந்து விளையாடினார். அப்பகுதியில் பிறந்த சில மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு மரகதம் என முதலமைச்சர் பெயர் சூட்டினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, மத்திய சென்னை தொகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குச்சேகரித்தார்.

MUST READ