- Advertisement -

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூலை 03) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் பரிசோதனைகளுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 04) வீடு திரும்புவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!
மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.