spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

‘இந்தியாவின் குரல்’ என்ற தொடரின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டாவது உரை வெளியாகியுள்ளது.

we-r-hiring

சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு

அதில், “ரூபாய் 7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? அயோத்தியா முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை ரூபாய் 7.5 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்ததாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. சிஏஜி அறிக்கை குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ஏன் விவாதிக்கவில்லை?

அயோத்தியா திட்டத்தில் கூட ஊழல் செய்த கட்சி தான் பா.ஜ.க. என்று சிஏஜி அறிக்கை சொல்லியுள்ளது. 60 மாதங்கள் கொடுங்கள் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்.

‘Communalism, corruption, corporate, cheating, Character Assassination கொண்டதாக பா.ஜ.க. ஆட்சி உள்ளது. வகுப்புவாதம், ஊழல், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள் கொண்டதாக பா.ஜ.க. அரசு உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். 2014, 2019 போல் 2024 தேர்தலிலும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!

பா.ஜ.க.வின் வகுப்புவாத கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே குரலாக முழங்க வேண்டும். ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு விரோதமாக பிரதமர் செயல்படுகிறார். இந்தியா கூட்டணியின் பரப்புரை பா.ஜ.க. கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தைக் கிழித்துவிட்டது.

பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

MUST READ