பள்ளிபாளையத்தில் கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பள்ளிப்பாளையம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஆட்சியர் உமா விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று கா பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகளவு மழைநீர் சூழ்ந்து கொண்டது. அப்போது, அந்த வழியாக வந்த 2 தனியார் கல்லூரி பேருந்துகள் மழைநீரில் சிக்கிக்கொண்டன.
இதனால் பேருந்தில் இருந்த 40 மாணவர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் கல்லூரி மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் பள்ளிபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.