Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000- தொலைநோக்கு திட்டம்!

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000- தொலைநோக்கு திட்டம்!

-

 

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000- தொலைநோக்கு திட்டம்!

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் படிப்பை ஊக்கப்படுத்துகின்ற தொலைநோக்கு திட்டம் என்று கல்வியாளர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

“கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பு செய்தி….ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்”- வேளாண் பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

2024- 2025 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்.

இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ள சில முக்கியமானவை மதுரையில் ரூபாய் 345 கோடியில் தொழில்நுட்ப பூங்கா, திருச்சியில் ரூபாய் 350 கோடியில் தொழில்நுட்ப பூங்கா, தஞ்சாவூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில்நுட்ப பூங்கா, புதுமை பெண்கள் திட்டம் போன்று அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் 1,000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்கிற தொலைநோக்கு திட்டம், விருதுநகர், சேலத்தில் ரூபாய் 2,483 கோடி செலவில் ஜவுளி பூங்கா போன்ற திட்டங்கள் தமிழகத்தை வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

"விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட்"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

மேலும் சிலப்பதிகாரம், மணிமேகலை தமிழ் இலக்கிய நூல்களை 25 இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழி பெயர்க்க ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பு மற்றும் கோவையில் கலைஞர் நூலகம் என்று தமிழ் மொழி, இலக்கியத்தை உலக அளவில் கொண்டு செல்கின்ற அற்புதமான திட்டம் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

தொடர் சரிவில் தங்கம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் திமுக அரசை இயங்கவிடாமல் முடக்கி விடலாம் என்று கனவு கோட்டை கட்டியது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசு அனைத்து தடைகளையும் உடைத்து விட்டு முன்னேற்றத்தை நோக்கி வீர நடை போடுகிறது.

MUST READ