மறைமலை நகர் போர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த போர்டு நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து மீண்டும் உற்பத்தியை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன பேரில், தமிழ்நாட்டில் போர்டு நிறுவனம் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது.
மேலும் இசைவாணையை புதுப்பிக்கக் கோரி போர்டு தொழிற்சாலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் அளித்திருந்தது. இந்நிலையில், போர்டு தொழிற்சாலையின் விண்ணப்பதை பரிசீலனை செய்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இசைவாணையை வரும் 31.3.2028 வரை புதுப்பித்து உத்தரவிட்டு உள்ளது.