Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ இரயில்களில் புழுக்கம் - பயணிகள் அவதி!

மெட்ரோ இரயில்களில் புழுக்கம் – பயணிகள் அவதி!

-

மெட்ரோ இரயில்களில் புழுக்கம் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ இரயில்களானது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தூரம் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் மெட்ரொ இரயில்களில் மூன்று லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் மெட்ரோ இரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதில் முக்கியமாக சுரங்கப்பாதையில் மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் உள் பகுதியில் ஏசி குறைக்கப்பட்டுள்ளதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மெட்ரோ இரயில் நிறுவனம் சிறப்பு அலுவலர்கள் குழுவை நியமித்து ஏசி அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் இதன் தொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் ‘ஏசி’ அளவும் குறைக்கப்படவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயணியருக்கு ‘ஏசி’ குறைந்திருப்பது போல் இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தொழில்நுட்ப சிறப்பு பிரிவு அலுவலர்கள் கொண்ட குழுவினர் ‘ஏசி’ அளவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தேவையான அளவுக்கு இதமான குளிர் இருக்கும் வகையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என இவ்வாறு தெரித்துள்ளனர்.

MUST READ