Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் மழை எதிரொலி... சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை!

தொடர் மழை எதிரொலி… சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை!

-

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தொடர்வதால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத பிறப்பு, சனி பிரதோஷம் மற்றும் வரும் திங்கட்கிழமை ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் வரும் 20 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Rain

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று மழை பெய்து வருவதால் கோயிலுக்கு செல்லும் வழியில் ஓடைகளில் தண்ணிர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து, வனத்துறை உத்தரவிட்டு உள்ளது.

MUST READ