spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

-

- Advertisement -

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ படித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டு சட்டப் படிப்பு பயில தகுதியானவர்கள் என அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

பிளஸ் 2 படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி கோவையை சேர்ந்த கோமதி என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை தொடர்ந்து, பத்தாம் வகுப்பிற்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம்  பெற்றவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க  அனுமதிப்பதற்காக முடிவெடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தான் பிளஸ் டூ படிக்காமல் டிப்ளமோ முடித்து அதன் பின்னர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி கோவை சேர்ந்த கோமதி என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

அந்த வழக்கின் விசாரணை நீதிபதி கார்த்திகேயன் முன்பே நடைபெற்றது. அப்போது இந்திய பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பத்தாம் வகுப்புக்கு பின் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்து பொறியியல் பட்டம் பெற்றவரும் மூன்றாண்டு சட்டப் படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என பார்க்கவுன்சில் முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இனி வரும் ஆண்டுகளில் சட்டப்படிப்பு தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில பத்தாம் வகுப்பிற்கு பின் டிப்ளமோ படித்து மூன்றாண்டு பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கும் படி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

MUST READ