தமிழ்நாடு

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்

Published by
Aishwarya
Share

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்

விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Image

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கண்டித்தும், அறிவித்தப்படி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டங்களும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றாம் நடைமேடை தண்டவாளத்தில் சுமார் 30 நிமிடம் ரயில் மறியலில் ஈடுபட்டதால், அந்த நடைமேடை ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் வேலையில் இருப்பவர்கள் வேலையை விடும் நிலைக்கு வந்தார்களே தவிர புதிய வேலை வாய்ப்பு இல்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். சனாதானத்திற்கு எதிராக பேசிவிட்டார்கள் என நாடு முழுவதும் பதற்றமான நிலையை உருவாக்குகிறார்கள். விலைவாசி உயர்வு,வேலை இல்லா திண்டாட்டத்தில் இருந்து மக்கள் கனவத்தை திசை திருப்பி பாஜக அரசின் மீது கவனத்தை ஏற்படுத்தவே இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற முயற்சிக்கிறார்கள்” எனக் கூறினார்.

This post was last modified on செப்டம்பர் 7, 2023 12:42 மணி 12:42 மணி

Show comments
Published by
Aishwarya
Tags: Chennai k. Balakrishnan protest போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்