கோவையில் இருந்து சுற்றுபயணத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துவங்க இருக்கும் நிலையில், அதிமுக கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்காமல் தவிர்த்து சென்றார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை வரும் 7ம் தேதி துவங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார் . கோவை விமான நிலையம் வந்த அவரிடம், திருப்புவனம் இளைஞர் காவல் துறை கஸ்ட்டியில் உயிரிழந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் கோவையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என கேள்வி எழுப்பபட்டது. ஆனால் அண்ணாமலை இந்த விவகாரங்கள் குறித்து பேச மறுத்ததுடன், செய்தியாளர் சந்திப்பு என்று அழைக்கும் பொழுது நான் பேசுகிறேன். இப்போது நான் பேச விரும்பவில்லை என என கையெடுத்து கும்பிட்டு விட்டு கிளம்பினார்.

வழக்கமாக கோவை விமான நிலையத்தில் மணி கணக்கில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி வந்த அண்ணாமலை தற்போது எந்த பொறுப்பிலும் இல்லாததால் , முக்கிய விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.