புதுக்கோட்டையில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவர் தங்கம் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்வா் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளாா் எனவும் தமிழ்நாட்டில் 12 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாக்குகள் திமுகவிற்கு உறுதி என்று பேட்டியளித்துள்ளாா்.திமுகவில் பல்வேறு அணிகள் இருந்த நிலையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் திமுகவில் புதிதாக மாற்று திறனாளிகள் அணி என ஒன்றை உருவாக்கி அந்த அணிக்கு தலைவர் மற்றும் நிர்வாகிகளை அறிவித்தார். அதன்படி புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அணி தலைவரும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவருமான தங்கம் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்திற்கு வருகைத் தந்தார். அவரை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் திமுக அலுவலகத்தில் உள்ள தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மாற்றுத் திறனாளி உறுப்பினர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் அணி தலைவர் தங்கம் கூறுகையில், கடந்த காலங்களில் மாற்றுத் திறனாளிகளை ஊனமுற்றோர் என்று கூறி வந்தனர். அதனை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தான். அதே போன்று கலைஞர் கருணாநிதி காலம் முதல் தற்போது உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலம் வரை மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக தற்போது மாற்று திறனாளிகளுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான ஆணையை கடந்த மாதம் அரசு பிறப்பித்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 2026 தேர்தலில் திமுகவிற்கு மாற்றுத் திறனாளிகள் அனைவரும் 234 தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். குறிப்பாக தமிழ்நாட்டில் 12 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்பது உறுதி என்றார்.
மதுரை ஆதினம் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை-வழக்கறிஞர் சேதுபதி