Homeசெய்திகள்தமிழ்நாடுநாள்தோறும் 1,000 முகாம் நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

நாள்தோறும் 1,000 முகாம் நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு - மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

we-r-hiring

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் 1,000 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவை நாள்தோறும் 1,000 முகாம்கள் என மாற்றப்பட்டுள்ளது.

மூன்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிப்பு!

காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை முகாம்களை நடத்தவும் வீடு வீடாக சென்று ப்ளூ மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக ஆய்வுச் செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு, புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஐந்து சுகாதாரக் குழுக்கள் மூலமாக பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

“மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின், அதற்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும், சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ