- Advertisement -
திருப்பதியில் பிரபுதேவா சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகர் பிரபுதேவா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற பிரபுதேவா தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கி ஏழுமலையானை தரிசனம் செய்தார். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த நடிகர் பிரபுதேவா செய்தியாளரிடம் பேசுகையில், திருமணத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஏழுமலையானை தரிசனம் செய்திருப்பதாக தெரிவித்தார். பிரபுதேவா வந்ததை அறிந்த அப்பகுதியில் இருந்த ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.