Homeசெய்திகள்தமிழ்நாடுதயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

-

 

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
File Photo

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

90 வயதாகும் தயாளு அம்மாளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தயாளு அம்மாள் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சைப் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழ்ப் பேரவை நிகழ்ச்சியை முடித்து விட்டு, மருத்துவமனைக்கு சென்று தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அத்துடன், உணவு ஒவ்வாமை ஏற்பட்டதற்கான காரணங்களையும், மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

மருத்துவமனையில் சுமார் ஒரு மணிநேரம் இருந்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

MUST READ