Homeசெய்திகள்தமிழ்நாடுவேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்

வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்

-

வேப்பூர் அருகே தண்ணீரை தேடி வீட்டிற்குள் மான் புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். காலையில் வழக்கம்போல் தூங்கி எழுந்து வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார்.

வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்

அப்போது வீட்டிற்கு வெளியில் திடீரென நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டதால் செல்வம் வெளியில் ஓடிவந்து பார்த்து குறைத்து கொண்டிருந்த நாய்களை துரத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

வீட்டின் கதவு திறந்து இருந்ததை கண்ட கிளை மான் ஒன்று செல்வம் வீட்டிற்கு வெளியே வந்த நேரத்தில் மான் வீட்டிற்குள் புகுந்து தண்ணீரை தேடியது.

வீட்டின் அறைக்குள் ஆளுயற பெரிய கிளை கொம்புகளை கொண்ட கிளை மானை கண்ட செல்வம் சற்று பதட்டத்துடன் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட்டுள்ளார்.

வேப்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான்

பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் கிளை மானை அருகில் உள்ள காப்பு காட்டிற்குள் துரத்தி விட்டனர்.

பெரியநெசலூர், குறிச்சி, மாளிகைமேடு, மகரூர், ஈரியூர் பகுதியில் உள்ள
காப்புக்காடுகளில் உள்ள ஏரி, குட்டை, குளம் போன்ற நீர்நிலைகள் கடும் வெயிலின் காரணமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் மான்கள் மக்கள் வசிக்கும் ஊருக்குள் தண்ணீர் தேடி வந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ