Homeசெய்திகள்தமிழ்நாடுஉதவித் தொகை வழங்கும் பணியில் தாமதம் – தமிழ்நாடு அரசு தெளிவு விளக்கம்!

உதவித் தொகை வழங்கும் பணியில் தாமதம் – தமிழ்நாடு அரசு தெளிவு விளக்கம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இம்மாதத்திற்கான உதவித்தொகை உதவிகள் வழங்‌கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியம் வழங்கும் பணியில் தாமதம் – தமிழ்நாடு அரசு தெளிவு விளக்கம்!

அரசின் விளக்கக் குறிப்புகள்: பயனாளிகள் பட்டியல் தயார்:
ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 3 வகையான ஓய்வூதியத் திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் முழுமையாகத் தயார் செய்யப்பட்டு, முறைப்படி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தாமதத்திற்கான காரணம்: தொடர் அரசு விடுமுறைகள் காரணமாகப் பட்டியலுக்கான உரிய ஒப்புதலைப் பெறுவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயப்படத் தேவையில்லை: இந்தத் தற்காலிகத் தாமதம் குறித்து உதவித்தொகை  பயனாளிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் உதவித்தொகை பயனாளிகளின் கணக்கில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு உறுதியளித்துள்ளது.

 

MUST READ