சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியலுக்குத் தனி துறை தொடங்க வைப்பு நிதியாக ஐந்து கோடி ரூபாய்காண காசோலையினை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் வழங்குகிறார்.

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனி துறை உருவாக்கிட ஐந்து கோடி ரூபாய் நிதி மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் 3 தமிழ் அறிஞர்களுடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூல் உரிமை தொகை மற்றும் மறைந்த ஐந்து தமிழ் அறிஞர்களுடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையாளர்களிடம் நூல் உரிமை தொகையை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அது மட்டும் இல்லாமல் 2021 ஆம் ஆண்டு ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுகளை 38 தமிழர்களுக்கும், சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது 10 நபர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இதில் தமிழ் அறிஞர்களாக இருக்கக்கூடிய 38 நபர்கள் மேலும் பல்வேறு மொழிபெயர்ப்புகள் செய்த 10 நபர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் இன்றைய தினம் (டிசம்பர் 21) வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியிலே தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


