spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வயிற்றுபோக்கு- தீவிர சிகிச்சை

பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வயிற்றுபோக்கு- தீவிர சிகிச்சை

-

- Advertisement -

பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வயிற்றுபோக்கு- தீவிர சிகிச்சை

நாமக்கல் – சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்கிற கடையில் பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Image

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிர் இழந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள மிஸ்டர் பர்கர் என்ற உண்வகத்தில் பர்கர் சாப்பிட்ட சஞ்சய் (18) என்ற இளைஞருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த கடையில் பர்க்கர் சாப்பிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

நேற்று அந்த கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்ததால், கடைக்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ