Homeசெய்திகள்தமிழ்நாடு"எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை"... மீண்டும் மன்னிப்பு கோரினார் இர்பான்

“எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை”… மீண்டும் மன்னிப்பு கோரினார் இர்பான்

-

- Advertisement -

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும், மருத்துவ சட்டங்களை தான் மதிப்பதாகவும் யூடியூபர் இர்பான் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான இர்பான் – ஆசிபா தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவத்தின்போது இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று வெட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும்  இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. மேலும் புகாரில் சிக்கிய மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை அளிக்க தடை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

குழந்தை பாலின விவகாரம் - மன்னிப்பு கோரினார் இர்ஃபான்

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த விவகாரத்தில் மருத்துவத் துறையிடம் யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இர்பானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளதால், தனது உதவியாளர் மூலமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் விளக்கக் கடிதம் அளித்துள்ளார். அதில் எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும், மருத்துவச் சட்டங்களை மதிப்பதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

MUST READ