spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய்!

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய்!

-

- Advertisement -

சென்னை மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இன்று காலை நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்  இன்று சமத்துவக் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

'ஜனநாயகன்' ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்!

இந்த கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1500 பேர் பங்கேற்கும் நிலையில், அவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

MUST READ